the people hassle of the Perambalur District Collector office notice
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தவறான செய்திக் குறிப்பு வெளியிட்டு பொதுமக்களை அலைகழித்து வருகிறார். கடந்த 15 ம் தேதி செய்திக் குறிப்பை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ரூ.25 செலுத்தி வண்ண வாக்காளார் அடையாள அட்டையை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்து இருந்தார். ஆனால் அவரின் அலுவகத்திலேயே இயங்கும் அரசு இ சேவை மையத்தில் அது நடைமுறை செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதை பொதுமக்கள் நேரில் வந்து கேட்டு வீணாக திரும்பி செல்கின்றனர். அந்த மையத்தில் வண்ண வாக்காளர் அடையாள அட்டை அச்சிடும் எந்திரம், மற்றும் அதற்கான மென்பொருளும் வரவில்லை தெரிந்து கொண்ட மக்கள் கலெக்டரும் இப்படியா! என வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.
அறிவிப்புகளை வெளியிடும் முன்னர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சிப் பணியாளர்கள், உரிய முறையில் இயங்குகிறாதா என்றும், துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்த பின்னரே பொதுமக்களுக்கான அறிவிப்புகளை பரிசோதித்து வெளியிட வேண்டும். இவ்வாறு ஒரு கவனக்குறைவால் வெளியிடும் தகவலால் பொதுமக்கள் வீணாக வந்து செல்ல வேண்டியுள்ளது. இது போன்ற வீண் அலைச்சலை தவிர்க்க உறுதிப்படுத்திய பின்னரே அறிவிப்புகளை வெளியிட வேண்டும் பொதுமக்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.