பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு BSc.,/Diploma தேர்ச்சியுடன் ஹீமோடயாலிசிஸ் பிரிவில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற 150 ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாதம் ரூபாய் 55,000- ஊதியத்துடன் இலவச இருப்பிடம், விமான டிக்கெட. உணவு மற்றும் மருத்துவக் காப்பீடு, முதலியவை வழங்கப்படும்.

எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள செவிலியர்கள் www.omcmanpower.com என்ற வலைதளத்திற்கு சென்று ஆன்லைன் சேவையில் ஹீமோடயாலிசிஸ் செவிலியர் பணியிடத்திற்கு 18.05.2017-க்குள் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

இணையதளத்தில் பதிவுசெய்த மனுதாரர்களுக்கு மட்டும் 21.05.2017 மற்றும் 22.05.2017 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் நேர்காணல் போட்டிக்கு அழைக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு 044- 22505886 , 22502267 , 22500417 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக விவரங்கள் அறிந்து கொண்டு பயன்பெறலாம்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!