The production of Rich Plum Cake was launched at the Aswins Home Special for Christmas and New Year

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ரிச் ப்ளம் கேக் தயாரிக்கும் பணி அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெசலில் துவங்கியது.

பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு திருச்சி சென்னை, புதுச்சேரி, நாமக்கல், ஆத்துார், கரூர், சென்னை, அரியலூர், துறையூர் ஊர்களில் என 24 ஆகிய ஊர்களில் கிளைகளை கொண்டு இயங்கும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ் நிறுவனம் அஸ்வின்ஸ் ஹோம் பேக்கர்ஸ், என்ற பெயரிலும், அஸ்வின்ஸ் ரெஸ்டாரண்டு என்ற பெயரில் உயர்தர சைவ உணவகமும் நடத்தி வருகிறது.

இதில் அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் வகையில் மினரல் வாட்டர், ஒரே ஒரு முறை மட்டுமே எண்ணெய் வகைகள் உபயோகப்படுத்தப்பட்டு பொருட்களை தரமாகவும், சுகாதாரமாகவும் வழங்கி வருகின்றது.

தீபாவளி, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், பக்ரித் கிறிஸ்துமஸ், (நீயூ இயர்) புத்தாண்டு பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பலகாரங்கள் மற்றும் அறுசுவை பதார்த்தங்களை தயாரித்து நாவிற்கு இனிய வகையில் அளித்து வருகிறது.

ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர நவீன எந்திரங்களை கொண்டு மிருதுவாகவும், ருசியாகவும் பிறந்த நாள் கேக் முதல் பல வகையான கேக் வகைகள் தயார் செய்து விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புது வகையான ரிச் ப்ளம் கேக் தயாரிக்கும் பணி அஸ்வின்ஸ் ஹோம் பேக்கர்ஸில் நேற்று துவங்கியது.

இது குறித்து அஸ்வின் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.வி.கணேசன் தெரிவித்தாவது: ரிச் ப்ளம் கேக் பேரீட்சை, வெள்ளிரி விதை, ஆரஞ்சு, திராட்சை, கலர் புரூட்ஸ், இஞ்சி, செரி, அத்திப்பழம், ஏலக்காய், பட்டை, சுருள்பட்டை, கிராம்பு, கரம் மசாலா, முந்திரி, தேன், மற்றும் பழரசங்களை சேர்த்து பின்னர் சுமார் ஒரு மாதம் வரை இதனை பதப்படுத்தி, பின்னர் கேக் தயாரிக்கப்படும்.

இது முற்றிலும் மாறுபட்ட கூடுதல் சுவையுடன் இருப்பதோடு சத்தானதாகவும், உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக இருக்கும்.

இது வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது என தெரிவித்தார். ரிச் பள்ம் கேக்கை ஹோம் பேக்கர்ஸ் மாஸ்டர்கள் பிரவீன், லட்சுமண் தலைமையில் பேக்கரி பணியாளர்கள் ஈடுப்பட்டனர். மேலாளர்கள் சூர்யா, அசோக் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!