The resolution in the meeting demanding the creation of a separate welfare for the burden of workers
சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கவேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட 10 வது மகாசபை நாமக்கல் சிஐடியு அலுவலகத்தில் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட உதவிச் செயலாளர் அசோகன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;
தமிழக அரசு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். 50 கிலோ எடை கொண்ட மூட்டைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு பணி செய்யும் இடங்களில் ஓய்வு அறை அமைத்து தர வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவராக ராமசாமி, துணைத்தலைவர்களாக யோகநாதன், புஷ்பராஜ், மாவட்டசெயலாளராக வேலுசாமி, மாவட்டபொருளாளராக முனியப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.