The Tamil Nadu government should withdraw the Land Consolidation Act; Communist statement of the coalition party!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

விவசாயிகளையும், விவசாயத்தையும், நீர்நிலைகளையும் அழித்தொழிக்கும் தமிழக அரசு கொண்டுவந்துள்ள நிலஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இச்சட்டத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்துகிறோம்.

கடந்த 21.4.2023 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா முன்மொழியப்பட்டது. அம்மசோதா அறிமுகம் செய்யப்பட்ட அதே நாளில் எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆகஸ்ட் 23ல் ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்டவிதிகளை தமிழக அரசு அக்டோபர் 18 அன்று அரசிதழில் வெளியிட்டுள்ளது.

இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 17.05.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்க அமைப்புகள் சார்பில் விவசாயிகளிடம் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதன் பின்னர் 22.6.2023 அன்று சென்னையில் பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து இச்சட்டத்திற்கு எதிராக விவசாயிகளும், பல்வேறு விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். இதனால் தமிழக அரசு கடந்த ஓராண்டு காலமாக இச்சட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது. தற்போது திடீரென்று இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் இச்செயலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

திமுக கடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதியில், அரசு திட்டங்களுக்காக நிலத்தை கையகப்படுத்தும் போது விவசாயிகள் ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. அந்த வாக்குறுதிக்கு நேரெதிரானது இந்த சட்டம் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். இச்சூழ்நிலையில், தற்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தை உடனே திரும்ப பெற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துவதோடு, தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

எதிர்காலத்தில் விவசாயிகளையும், விவசாயத்தையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு செயல்பட நினைத்தால் தற்போது கொண்டு வந்துள்ள நிலஒருங்கிணைப்பு சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுவதே விவசாயிகளுக்கு செய்யும் நன்மையாகும் என அதில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!