The wizard who put the body mantirikam, wife jailing

பெரம்பலூர் மந்திரவாதிக்கு இளம்பெண்ணின் சடலத்தை விற்ற மயான பணியாளர்கள் 3 பேர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மந்திரவாதி வீட்டில் கண்டெடுப்பு அகோரி பூஜைக்காக ரூ.20 ஆயிரத்துக்கு பிணத்தை விற்ற 3 பேர் உள்பட நான்கு பேரை சென்னையில் போலீசார் கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்து விசாரித்து வருகின்றர்.
பெரம்பலுாரை சேர்ந்த மந்திரவாதி ராஜராஹவன் என்கிற கார்த்திகேயனுக்கு (வயது 33) , ரூ.20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த மயான ஊழியர்கள், மூவரை பெரம்பலுார் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலுார் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள எம்.எம் நகரில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வீட்டில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு மரப்பெட்டியில், இறந்து மூன்று மாதங்கள் ஆன பெண் சடலம் அழுகிய நிலையில், பயங்கர துர்நாற்றத்துடன், துணியால் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது. மாந்திரீக பூஜைகள் செய்யப்பட்டதற்கான தடயங்களுடன், சடலம் இருந்தது.
இது குறித்து பெரம்பலுார் போலீசார் வழக்கு பதிந்து, அந்த வீட்டில் தங்கியிருந்த மந்திரவாதி ராஜராஹவன் கார்த்திக், இவனது மனைவி தீபிகா என்கிற நசீமா ( வயது27) உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரித்ததில் , மந்திரவாதி ராஜராஹவன் என்கிற கார்த்திக், அந்த வீட்டில் தனது மனைவியுடன் ரூ. 20 ஆயிரத்திற்கு வாடகைக்கு வசித்து வருவதும், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு, அவர்களது பிரச்னைகளைச் சரி செய்வதாகக் கூறி, பில்லி சூனியம், இறந்தவர்களின் ஆவிகளுடன் உறவினர்களை பேச வைப்பது, பெண்களை வசியம் செய்வது, ஆண்களை வசியம் செய்வது உட்பட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு, மந்திரவாதியாக பலரிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் விசாரித்ததில், மாந்திரீக வேலைக்காக, மந்திரவாதி கார்த்திக்குக்கு இளம்பெண்ணின் சடலம் தேவைப்பட்டது. இதற்காக, சென்னையில் உள்ள நண்பர்கள் வட்டத்தில் கூறியிலுந்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள மயான ஊழியர்களை மந்திரவாதி கார்த்திக்கின் நண்பர்கள் அணுகி, ரூ. 20 ஆயிரம் ரூபாய்க்கு சடலத்தை விலைக்கு பேசி வைத்திருந்தனர்.
இதன்படி, கடந்த ஜன., 18ம் தேதி தற்கொலை செய்து, பிரேத பரிசோதனைக்குப் பின் புதைக்கப்பட்ட, சென்னை தேனாம்பேட்டை எம்.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகள் அபிராமி (வயது 21), என்பவரது சடலத்தை, மந்திரவாதி கார்த்திக்குக்கு குழியில் இருந்து தோண்டி எடுத்து கொடுத்ததும், அந்த சடலத்தை, மதுரையை சேர்ந்த எம.எஸ்.சி சைக்காலஜி படித்த வினோத்குமார் என்பவர் பெரம்பலூருக்கு மந்திரவாதியின் காரிலேயே எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ளார். பின்னர் அகோரி பூஜைகள் செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததும், நாளேடுகளில் விளம்பரம் கொடுத்து மந்திரம் கற்றுத்தருவதாகவும் விளம்பரமும் செய்தது தெரியவந்தது.
இவருக்கு தமிழகம் முழுவதும் மாந்தீரக வட்டாரம், மாயாஜாலங்கள், கூடுவிட்டு கூடு பாய்தல் போன்ற மாந்தீரிகம் கற்று கொள்ள நிறைய பேர் பணம் கொடுத்து ஏமாந்ததும் தெரிய வந்துள்ளது. சடலத்தை எடுத்து வர பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பூஜைக்கு பயன்படுத்திய மண்டை ஓடுகள் சாலை ஊரத்தில் உள்ள ஆற்றோர இடுகாடுகளில் இருந்து எடுத்து வந்து பூஜைக்கு பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, பெரம்பலுார் போலீஸார் மயிலாப்பூர் மயான ஊழியர்கள் விஜயகுமார், மணிமாறன் உள்பட மூவரை கைது செய்து மேலும் விசாரிக்கின்றனர். இந்நிலையில் மந்திரவாதி ராஜராஹவன் என்கிற கார்த்திகேயன், மந்திரவாதியின் மனைவி தீபிகா என்கிற நசீமா ஆகியோரை பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுஜாதா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். அதன் பேரில் போலீசார் ராஜராஹவன் என்கிற கார்த்திகேயன், மந்திரவாதியின் மனைவி தீபீகா என்கிற நசீமா ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497