The young men hanged herself
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்தவர் ராஜேஷ், வயது 27. விவகாரத்து பெற்ற இவரது தாயார் சமத்துவபுரத்தில் வசித்து வருகிறார். தந்தை இறந்து விடடார். இந்நிலையில் அண்ணன் குடும்பத்தாருடன் ரமேஷ் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவரது அண்ணனும், சில மாதங்களுக்கு முன்பு, வேலை தேடி வேறு ஊருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.
இதில் தனியாக வசித்து வந்த ரமேஷ் கடுமையான மன அழுத்தத்தில் காணப்பட்டுள்ளார். நேற்றிரவு, மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.