Theft of gold thali from Mariamman temple near Perambalur; Mysterious persons hand in hand; Police investigation!
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அருகே உள்ள சிறுவயலூர் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. வழக்கம்போல் இன்று மாலையும் பூஜை செய்வதற்காக பூசாரி கோவிந்தராஜ் சென்றார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர். உள்ளே சென்று பார்த்த போது மாரியம்மன் சாமி சிலை கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் தங்க தாலி திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையனை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.