third-saturday-of-purattasi-elampalur-special-worship-at-the-temple-of-cumbum-perumal
மூன்றாம் சனிக்கிழமை : முன்னிட்டு எளம்பலூர் கம்பம் பெருமாள் கோவலில் சிறப்பு வழிபாடு செய்து இருந்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில் அரசுக்கு சொந்தமான பிரம்ம ரிஷி மலையின் உச்சியில் கம்பம் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவலில் ஆண்டு தோறும் எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 3 சனிக்கிழமை வழிபடுவது வழக்கம். நேற்றும் அதே போன்று மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
பிரம்ம ரிஷி மலை என்றழைக்கப்படும் எளம்பலூர் மலை அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் ஆலத்தியலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கிராம முக்கிய பிரமுகர்கள், காரியஸ்தர்கள், மற்றும் மகாசித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் ராஜ்குமார், ரோகிணிராஜ்குமார், உள்ளிட்ட பலர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி கம்பம் பெருமாளை வணங்கினர். தண்ணீர் பந்தல், கோனேரிபாளையம், எளம்பலூர், பெரம்பலூர் பகுதி மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.