To mark the National Day of Disaster Reduction awareness Rally of school students
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ஆம் நாள் தேசிய பேரிடர் குறைப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அதனை முன்னிட்டு இன்று பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேரிடர் காலங்களில் பொதுமக்கள் எந்தெந்த வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும்,
அவசர காலங்களில் மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்க, என்பன போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் மாணவ-மாணவிகள் நகரை வலம் வந்தனர்.
இப்பேரணியானது, வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி காமராஜர் வளைவு, சங்குப் பேட்டை, வெங்கடேசபுரம், பாலக்கரை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது. இப்பேரணியில் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் க.முனுசாமி, வட்டாட்சியாகள் பாலகிருஷ்ணன், ஏழுமலை, ரெட் கிராஸ் கவுரவ ஆலோசகர் என். ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.