To those who change money in the bank at Manicures finger ink? Civilians in shock .. !!
finger_vote வங்கியில் பணத்தை மாற்ற வருபவர்களுக்கு கை விரலில் அடையாள மை வைக்கப்படும் என மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து கடந்த 9-ஆம் தேதி முதல் அனைத்து வங்கிகள், ஏடிஎம் இயந்திரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வங்கிகளில் இருப்பு இருந்த ரூ.100 நோட்டுகளும் மக்களிடம் வழங்கப்பட்டதால், தற்போது புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் மட்டும் வழங்கப்படுகின்றன.

வங்கியில் பத்தாயிரம் ரூபாய் எடுத்தால் 2 ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுகளும், ரூ. 8 ஆயிரத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் வழங்கப்படுகின்றன. இந்த நோட்டுகளை கடைகளில் கொடுத்து சில்லறை மாற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். நாட்டில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் 10 சதவீதம் பேர்தான் உள்ளனர். ஆனால், 90 சதவீதம் பொது மக்கள் இதற்கான தண்டனைகளை அனுபவித்து வருகிறார்கள். ஏற்கனவே, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் அன்றாட வாழ்க்கையை தொலைத்துவிட்டு நடுத்தெருவில் நிற்கிறார்கள் பொதுமக்கள்.

தற்போது கறுப்பு பணத்தை தடுக்கும் விதமாக வங்கிகளுக்கு சென்று அதிகபட்சம் ரூ.4500 பணம் மாற்றுபவர்கள் பணம் எடுத்தா கையில் அழியாத அடையாள மை வைக்கப்படும் என மத்திய அரசு அதிரடி அறிவிப்பால் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் அதிரடியால் ஒரு நபர் 4,500 ரூபாய்க்கு மேல் வங்கிக்குப் போய் பணம் எடுக்கவே கூடாதா?

வங்கிகளில் மை வைக்கும் நடைமுறை எத்தனை நாள் அமலில் இருக்கும்?

அந்த மை அழியும் வரை வங்கி பக்கமே எட்டிப் பார்க்க கூடாதா? அப்படியே போனால் கருப்பு பணத்தை வெள்ளையாக்க வந்த தேசதுரோகி என உள்ளே தள்ளிவிடுவார்களா? என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை தருவாரா மோடி.

– மீண்டும் மீண்டும் வருவதை தடுக்கத்தான் இந்த திட்டம் என சொல்லும் மத்திய அரசு, ரூ4,500 பணத்தை ஒரு முறை வங்கியில் எடுத்துவிட்டு இனி ஏடிஎம் இயந்திரங்களில் எஞ்சிய தொகைக்காக காத்து கிடக்க வேண்டுமா?

– இனி ஏடிஎம் இயந்திரங்களில் இன்னும் ரூபாய் நிரப்பப்படாத நிலையே நீடிக்கும் நிலையில் பணத்தை எப்படியும் எடுத்துவிட வேண்டும் என்பதற்காக ஏஎடிம் இயந்திரங்களில் மீண்டும் மீண்டும் வருகிறார்களே? அப்படி வருவதை தடுக்கவும் ஏதாவது கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துவிடுமோ? என்ற கேள்வியும் எழுகிறது.

– ஏற்கனவே, வங்கி ஊழியர்கள் விடுமுறையின்றி பணியாற்றி வரும் நிலையில், இப்போது மை வைக்கும் கூடுதல் பணியையும் செய்யப்போவது யார்? 10 சதவீதம் உள்ள கருப்புப் பண முதலைகளைக் கட்டுப்படுத்த முடியாத மோடி அரசோ, நாட்டில் நாளும் நடைபெறும் ஊழல் மற்றும் லஞ்சம் வாங்குபவர்களுக்கு மை வைக்கப்போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!