Today returned home after treatment: DMDK leader Vijayakanth
சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை வீடு திரும்பினார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு நேற்று முன்தினம் இரவு ‘திடீர்’ உடல்நல குறைவு ஏற்பட்டதாக, அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் அவர் உடல்நலம் சீரடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நிலை ஓரளவு சீரடைந்ததை தொடர்ந்து, அவர் நேற்று பிற்பகலில் வார்டுக்கு மாற்றப்பட்டார். விஜயகாந்த் வேகமாக குணமடைந்து வருவதாகவும், மருத்துவமனையில் இருந்து இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதே ◌ால் இன்று காலை சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் விஜயகாந்த் வீடு திரும்பினார்.