ஆக்கிரமிப்பு அகற்றுவதில், கடமை தவறியாதாக பெரம்பலூர் கலெக்டர், எஸ்.பி மீது நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப் போவதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெரம்பலூர், மே.30 :- பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள நன்னை கிராமத்தில் ஏரியை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்தது தொடர்பாக நன்னை கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் (வயது 70) என்பவர் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால், ஆட்சியராளர்களோ, அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியிடம் முறையிட்டார். அதனால், இன்று நன்னையில் உள்ள 7.5 ஏக்கர் பரப்பளவு நல்ல தண்ணீர் என்ற ஏரியை அப்பகுதியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை பார்வையிட்டார்.

பின்னர், டிராபிக் ராமசாமி பேசியதாவது: செய்தியாளர்களிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் நன்னை ஏரி ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்கியது தொடர்பாக தொலைபேசிவாயிலாக தொடர்பு கொண்டு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இணைப்பை துண்டிக்கின்றனர். 70 வயதான பெண் இதற்காக போராடும் போது அதிகாரிகள் அவரை தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் அலைகழித்து வருகின்றனர்.

இது தொடர்பாக வழக்குத் தொடர அந்த ஏரி ஆக்கிரமிப்பை பார்வையிட்டு சட்டப்படி வழக்குத் தொடர்ந்து ஏரியை மீட்பதற்கான ஆதாரங்களை திரட்டுவதற்காக இன்று பெரம்பலூர் வந்துள்ளேன். முறைப்படி அதிகாரிகளுக்கு கடிதமும் அனுப்பி உள்ளேன். எனக்கு உடல் நிலை சரியில்லை. இருந்தாலும், 70 வயது பெண் தனியாக போராடும் போது நாம் விடக்கூடாது என்ற அடிப்படையில் வந்துள்ளேன். அரசாங்கத்திலேயே இல்லாத எஃப்.எம்.பி உள்ளிட்ட ஆவணங்கள் ஆதரமாக பெண் வைத்துள்ளார். நாளை மறுநாள் நிச்சயம் வழக்குத் தொடருவேன். நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றவும், ஏரியை முழுமையாக மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என

கடமை தவறிய வழக்கு :

பெரம்பலூர் ஆட்சியர் மற்றும் எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் மீது சட்டப்பிரிவு 110, 166ஏ மற்றும் 217 -ன் கீழ் கடமை தவறிய குற்றத்தின் கீழ் வழக்கு தொடரப்போவதாகவும், 2013 ல் பெற்ற உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. மக்களையும், பொதுச் சொத்துக்களையும் காப்பாற்ற தவறிவிட்டால் இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரலாம். இதற்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை, 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், செய்தியாளர் கேள்விகள் கேட்டதற்கு பதிலளித்த டிராபிக் ராமசாமி கூறியதாவது: நான் அரசியல் பண்ணுகிற ஆள் இல்லை,எனக்கு அரசியல் தேவையே இல்லை. தமிழகத்தில் மக்களாட்சி இல்லை. கொள்ளையடிக்கி ஆட்சிதான் இருக்கிறது. கொள்கையில்லா ஆட்சியாக உள்ளது. பதவி ஆசைதான் பிடித்து அலைகிறார்கள். எல்லாத் தலைவர்களுமே!. மக்களுக்காக சிந்திக்க கூடியவர்கள் கூட இல்லை.

தேவையில்லாத மாட்டிறைச்சி விவகாரம், மக்கள் தான் மாறா வேண்டும். என்னை போன்று 10 பேர்கள் வெளியே வர வேண்டும். மக்களுக்காக எதை வேண்டுமானலும் செய்வேன். 120 வயது வரை வாழ்வேன்.

மக்கள் சினிமா நடிகர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

60 வருடமாக சினிமா கூட்டம் மக்களை கெடுத்து விட்டது. அது தான் உண்மை. நல்லது செய்து கொடுக்கிறேன் என்ற பெயரில் கெடுதல் அதிகம் கற்பித்து கொடுத்துவிட்டன. எப்படி போலீசை அடிக்கிறது. திருடுவது உள்ளிட்ட பல்வேறு தவறான பாதைகளை வழிகாட்டிவிட்டது. இது எல்லாம் தேவையில்லாதது. இனிமேல் மக்கள் சினிமா நடிகர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சினிமாவிற்கும், அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஏன் என்றால் ஜெயலலிதாவாலேயே முடியவில்லை. நல்ல மூளையுள்ள அந்த பெண்ணையும் சாகடித்து விட்டார்கள், இன்று பதவி ஆசை பிடித்து அலைகிறார்கள். கொள்ளை அடிப்பதுதான் கொள்கையாகிவிட்டது. மத்திய அரசு பல தேவையில்லாத சட்டங்களை கொண்டுவருகிறது. மக்களைப்பற்றி அக்கறை இல்லை. அதிமுக பிஜேபி யோடு கூட்டுசதி சேர்ந்து உள்ளார்கள். காலை வாரும் போதுதான் உணர்வார்கள் என்றும்,

ஜுலை மாதம் ஆட்சி கலையும் : ஜனாதிபதி ஆட்சி வரும்

தமிழகத்தில் ஜுலை மாதம் ஆட்சி கலையும், அதற்கான வழக்கு நிலுவையில் உள்ளது. மக்களுக்கு சேவை செய்ய யாரும் தயாராக இல்லை. அதுதான் உண்மை. மக்கள் பயத்தை விட வேண்டும். துணிந்து சமூக அவலங்களை தட்டி கேட்க முன்வரவேண்டும். இவங்கதான் (மக்கள்) ராஜா, அவங்க தொண்டர்களாக இருப்பார்கள்.

தமிழகத்தில் செய்தி துறைச சார்பில் ஒரு குற்றவாளியின் படத்தை போட்டு, எடுபிடி உள்ளிட்ட பலபேரின் படங்களை போட்டு 2 பக்கம் விளம்பரங்களை பிரசுரம் செய்துள்ளனர். எல்லா பத்திரிக்கைகளிலும் வந்துள்ளது. இதெல்லாம் யார் வீட்டு பணம் ?. சட்டப்படித் தவறு. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் இருவரின் படத்தை போடமல் வெற்றி சொல்லுங்கள் பார்க்கலாம். தேவையில்லாத அரசியல்.

எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு இருக்கும் அக்கறை கூட கற்றவர்களான நமக்கு ஏன் இருக்க கூடாது.

பெரும்பாலான மாமூல் அதிகமாக வாங்குதற்கே அதிக சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அரசியல்வாதிகள் மக்களுக்கு விரோதமாக செயல்படுவதே தொழிலாக கொண்டுள்ளனர். அதிமுக, திமுக கட்சிகள் பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறார்கள், சட்டத்தை மீறி தட்டி வைப்பதுடன் கரண்ட் திருட்டு உள்ளிட்டவை எதற்கு! மக்களுக்கு 10 பேருக்கு சோறு போடலாம்.

மத்தியில் பி.ஜே.பி , காங்கிரஸ் இல்லாத ஆட்சி மாற்றம் வரவேண்டும். என பேசினார். உதவியாளர் பாத்திமா, நன்னை நல்லம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!