Training course for legal volunteers on behalf of Perambalur District Legal Services Commission!
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின சார்பில் அதன், செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான (பொறுப்பு) சங்கர் சட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது:
சட்ட தன்னார்வலர்கள் என்பவர் பொது மக்களுக்கும், வழக்காடிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் பாலம் போன்றவர்கள் மேலும் குடும்ப பிரச்சனை, சொத்து பிரச்சனை, குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம், பிறப்பு இறப்பு சான்றிதழ் மற்றும் அனைத்து விதமான பிரச்சனைகள் குறித்து சட்ட உதவி தேவைப்பட்டால் அவர்களின் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட சட்ட உதவி மையத்தில் அளித்து, மனுவினை பரிசீலனை செய்து சம்மந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அவர்களுக்கான உதவியை பெற்று தரலாம் என்றும் மேலும் சிறையில் இருக்கும் சிறைவாசிகளுக்கு பிணையில் செல்வதற்கு உறவினர்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு சட்ட உதவி மையத்தில் அளித்தால் இலவசமாக பிணையில் எடுப்பதற்கு உதவி செய்து தரப்படும் என்றும் சட்டத்தன்னார்வலர்களுக்கு எடுத்துரைத்தார்.
இதில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் வெள்ளைசாமி மற்றும் பெரம்பலூர் இளைஞர் நீதி குழுமம் உறுப்பினர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டு சட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி வகுப்பில் சட்டத்தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஞ்சாயத்து அலுவலகங்களில் இயங்கும் சட்ட உதவி மையங்களில் பணிபுரியும் மற்றும் மக்கள் நீதிமன்றம் மற்றும் சட்ட உதவி முகாம்கள் நடத்துவதற்கு உறுதுணையாகவும் இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர்.