Truck-bus collision near Perambalur; 7 people injured!
பெரம்பலூர் அருகே முன்னே சென்ற தண்ணீர் லாரி மீது ஆம்னி பஸ் மோதியல் பெண் உள்பட 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இருந்து சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டைக்கு தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் சென்றுக் கொண்டிருந்தது. பஸ்சை, சென்னை, அம்பத்தூர் அருகே உள்ள வெங்கடபுரத்தை சேர்ந்த இக்பால் மகன் சையர் சூல் டிகர் (45) ஓட்டி சென்றார். பஸ் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. பஸ், பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூர் – மலையப்ப நகர் இடையே சென்ற போது முன்னே சென்ற தண்ணீர் ஏற்றி சென்ற டேங்கர் லாரி மீது மோதி, ஆம்னி பஸ் விபத்திற்குள்ளனாது. இதில் பஸ்சின் முன்புறம் சேதமடைந்ததோடு, அதில் வந்த பயணிகள் 7 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார், மற்றும் விபத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.