Two Different Road accidents caused by: father and son killed on the spot, including 4 persons near in Perambalur
பெரம்பலூரில் இருந்து எசனை க்கு லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது, அதேபோல் எசனையில் இருந்து பெரம்பலூர் நோக்கி எதிரே இரு சக்கர வாகனத்தில் ஜான்பீட்டர் மற்றும் அவரது மகன் பிரவின் ஆகிய இருவரும் வந்து கொண்டிருந்தனர் அப்போது எசனை அருகே உள்ள நாற்கரன் கொட்டகை என்ற இடத்தில் எதிர்பாரத விதமாக நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலே தந்தை, மகன் ஆகிய இருவரும் பாலியானார்கள், தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் தப்பிஓடிய லோடு ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பிரிவு சாலை அருகே திருச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் பெரம்பலூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், மங்களுரை அடுத்த கஞ்சமயிலூரை சேர்ந்த சதீஸ் (22) பூபாலன் (21) இருவர் தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
தகவலறிந்த மங்கலமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.