Uprooted sacred fig due to wind and rain near Perambalur; Traffic damage!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ரெட்டிக்குடிக்காடு கிராமத்தில் அகரம்சீகூர் – செந்துறை சாலையில் இருந்து அரசமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது

அகரம்சீகூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அகரம்சீகூர் – செந்துறை சாலையில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது.

இவ்வழியாக ஜெயங்கொண்டம், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ் வசதி உள்ளது. அதிகாலை நேரத்தில் மரம் சாய்ந்ததால் எந்தவித பாதிப்பும் இல்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வந்த வதிஷ்டபுரம் விஏஓ மனோகரன் உள்ளூர் மக்கள் உதவியுடன் கிளைகளை வெட்டி எறிந்து போக்குவரத்தை சீர் செய்தார். இதனால் சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!