Va. Oo. C birthday in Perambalur, garlanded and honoured!
செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 153ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் சிவன் கோவில் அருகில், அவரது முழு உருவ படத்திற்கு, பெரம்பலூர் நகர சோழிய வேளாளர் சங்கம், மற்றும் இளைஞர் அணி வ.உ.சி பேரவையினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக வ.உ.சி சிதம்பரம் பிள்ளை சுதந்திரத்திற்காக பெறுவதற்காக கொடுமைப்பட்டதும், செக்கிழுத்தது குறித்தும், ஆங்கிலேயருக்கு எதிராக வணிகத்தில் கப்பல் வாங்கி ஓட்டிய தமிழன் வரலாற்றையும் நினைவு கூர்ந்தனர். அச்சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் சு.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் தெ.பெ.வைத்தீஸ்வரன், செயலாளர் முருகேசன், பொருளாளர் க.பாஸ்கர் மற்றும் திரளான பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.