Van-bike accident near Perambalur; Teenager killed!
பெரம்பலூர் அருகே இன்று மாலை வேனும் பைக்கும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெரமபலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் வேல்முருகன் (21), இவர் இன்று மாலை அகரம்சீகூரில் இருந்து, வயலூருக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். பைக் இன்டியன் பெட்ரோல் பங் அருகே சென்றபோது, எதிரே வந்த பொலிரோ பிக்-அப் வேன் வேல்முருகன் சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில், தூக்கி வீசப்பட்ட வாலிபர் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்கலமேடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வேல்முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.