VCK seeking to provide relief to the drought, in the demonstration on behalf in Perambalur
பெரம்பலூர் ஆட்சியரக நுழைவு வாயிலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில, தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்டத்தை வறட்சியால் பாதித்த முதன்மை மாவட்டமாக அறிவிக்க வேண்டும், உயிரிழந்த உழவர்களுக்கு தலா, ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு, எக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ஜுவனத் தொகை வழங்கவும், அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் வி. தொ. பா. இ மாநில செயலாளர் வீர.செங்கோலன், பெரம்பலூர் – கரூர் மண்டல அமைப்பாளர் இரா.கிட்டு, சிதம்பரம், கடலூர் மண்டல அமைப்புச செயலாளர் சு. திருமாறன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.