We want a separate flag for Tamil Nadu; Tamil Nadu People’s Front Movement request to the government!
கர்நாடகத்திற்கான தனிக் கொடியை கன்னட அரசு உருவாக்கி இருக்கிறது. அந்த கொடியை இந்திய கொடிக்கு இணையாக கர்நாடகா தலைமை செயலகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடக அரசு அலுவலகங்கள் அனைத்திலும் கொடியை பறக்க விடுகிறார்கள்.
கர்நாடகாவை விட தமிழ் மொழி இன உணர்வு மேலோங்கிய தமிழ்நாட்டில் தமிழ்நாடு நாள் விழாவை மக்கள் விழாவாக கொண்டாட தமிழக அரசு அறிவிக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டிற்கு என்று தனிக்கொடி ஒன்றை உருவாக்க வேண்டும் எனவும், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தமிழக மக்கள் முன்னணி இயக்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒன்று கூடி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு என்கிற ஒருங்கிணைப்பில் ஒரு கொடியை உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசு அந்த கொடியையோ அல்லது வேறு கொடியையோ தமிழ்நாட்டின் கொடி என அறிவிப்பு செய்தால் அதை தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் ஏற்றிடுவோம் ஏற்ற வைப்போம் என தமிழக மக்கள் முன்னணி சார்பில் அறிவித்துள்ளனர்.