Widespread rain in various places of Perambalur district!
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அமைந்தனர். இன்று மதியம் எசனை சுற்று வட்டாரப் பகுதிகளிலும், பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பிற்பகலில் லேசான மழை பெய்தது.
மக்காச்சோளம், பருத்தி, கம்பு உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.