will be held March 10, 12th class of the common exam for the government to hold a meeting for the better

2.3.2017 முதல் 31.3.2017 வரை 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகளும், 8.3.2017 முதல் 30.3.2017 வரை 10ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வுகளை சிறப்பாக நடத்துவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான பொதுத் தேர்வு கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் இன்று (20.2.2017) நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு 32 மையங்களில் நடைபெறவுள்ளது. 136 பள்ளிகளைச் சேர்ந்த 5,245 மாணவர்கள், 4,519 மாணவிகள் என மொத்தம் 9,764 மாணவ-மாணவிகள் 10 ஆம்வகுப்பு பொதுத் தேர்வை எழுதவுள்ளனர்.

12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 24 மையங்களில் நடைபெறவுள்ளது. 68 பள்ளிகளைச் சேர்ந்த 4,698 மாணவர்கள், 4,572 மாணவிகள் என மொத்தம் 9,270 மாணவ-மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதவுள்ளனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சிப் பணியாளர் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு வினாத்தாள்களை உரிய பாதுகாப்புடன் உரிய நேரத்திற்குள் கொண்டுசெல்ல வேண்டும் என்றும், தேர்வு மையங்களிலும் போதிய பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவேண்டும் என்று காவல் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், தேர்வு நாட்களில் மின்சாரம் தடையின்றி கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டுமென்றும், மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்குச் செல்ல ஏதுவாக உரிய நேரத்தில் போதிய அளவிலான பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (பொ) சுகுமாறன், பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் ராஜ்குமார், அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!