Woman killed in car crash near PERAMBALUR
பெரம்பலூர் அருகே உள்ள மங்களமேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராசு இவரது மனைவி சம்பூர்ணம் (55) விவசாயி கூலித் தொழிலாளி. இவர் இன்று மாலை 5 மணியளவில் ரஞ்சன்குடியில் விவசாய வேலைக்கு சென்று விட்டு மங்களமேடு செல்வதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னை முகப்பேரை சேர்ந்த ரமணன் (25) என்பவர் தனது குடும்பத்தினரோடு தஞ்சாவூர் சென்று விட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.
மங்களமேடு அருகே வந்து கொண்டிருந்த போது கார் திடிரென தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சம்பூர்ணம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சம்பூர்ணம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மங்களமேடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.