Women blocked the road with empty Pitchers near Perambalur for drinking water!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ளள நாட்டார்மங்கலம் கிராமத்தில் குடிநீர் கேட்டு இன்று காலை பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாட்டார்மங்கலம் கிராமத்தில் 5வது வார்டு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு, கடந்த சில நாட்களாக வீட்டு இணைப்புகளுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை காலி குடங்களுடன் நாட்டார்மங்கலம் – ஆலத்தூர்கேட் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து, தகவல் அறிந்த ஊராட்சித் தலைவர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன்பேரில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் சம்பவத்தால், அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் செட்டிக்குளம் – ஆலத்தூர்கேட் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.