Workers besiege Perambalur municipal office demanding EPF amount!

பெரம்பலூர் நகராட்சியில் இன்று காலை பணியாளர்கள் இபிஎ.ப் தொகை கேட்டு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் நகராட்சியில் 231 பேர் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடம் மாதம் ஒன்றுக்கு இ.பி.எப். தொகையாக கடந்த 2017ம் ஆண்டு முதல் தற்போது லவரை ரூ.1300 பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. 52 மாதங்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ. 67,600 ரூபாய் வீதம்231 நபர்களுக்கு ரூ.1,56, 15,600 தொகையானது பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு நிகராக நகராட்சி சார்பில், ஒப்பந்ததாரர் சார்பில் அவரது பங்களிப்பு எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது, என்பது தெரிய வரவில்லை என்றும், அதற்கு விளக்கம் கேட்டு, செலுத்திய தொகைக்கு நிகராக ஒப்பந்தாரிடம் நகராட்சி நிர்வாகம் வசூலித்து கொடுக்கவேண்டும் என்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 8 மணி அளவில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர், அலுவலக வாயில் முன்பும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகராட்சி அதிகாரிகள், பெரம்பலூர் போலீசார், சமரச பேச்சு வார்த்தை நடத்தினர், இன்று மதியம் 3 மணிக்கு ஒப்பந்தாரரை வரவழைத்து நேரடியாக தொழிலாளர்கள் முன்னிலையில் தெளிவு செய்வதாக உறுதி அளித்தன் பேரில் கலைந்து மீண்டும் பணிக்கு திருப்பினர். இதனால், காலை நேரத்தில் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!