World No Tobacco Day Awareness Walk: Perambalur Collector started

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபயணத்தை, பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரம்பலூரில் இன்று காலை மாவட்ட பெருந்திட்ட அலுவலக வளாகத்தின் முன்பு, ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் ஆணையரகத்தின் சார்பில் நடத்தப்பட்ட தொடங்கிய நடைப்பயணம் பாலக்கரை வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
இதில் புகையிலை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கும் வகையிலான பதாகைகள் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஜி.எஸ்.டி மற்றும் ஒன்றிய கலால் ஆணையரகத்தின் திருச்சி சரக உதவி ஆணையர் பாஸ்கரன், அரசு தலைமை மருத்துவமனை இருக்கை மருத்துவ அலுவலர் அர்ஜூனன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.