Yeani (Ladder) system to guide government school and college students starts in Perambalur!

அரசு பள்ளி -கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி தொடர்பாக வழிகாட்டும் ‘ஏணி, என்ற தன்னார்வ அமைப்பு பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையில், அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெயலட்சுமி தலைமையில் நடந்தது. லட்சுமி பாராமெடிக்கல் சயின்சஸ் கல்லுாரி தாளாளர் டாக்டர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.
அம்பேத்கர் கல்வி பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஏணி என்ற அமைப்பை துவக்கி வைத்து, அம்பேத்கர் குறித்து பேசினார்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, லட்சுமி பாராமெடிக்கல் சயின்சஸ் கல்லுாரி முதல்வர் தங்கராசு, குரும்பலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரி போராசிரியர் குமணன், ஆசிரியர்கள் நடராஜன், அருண், சிலம்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தாமோதரனின் மந்திரமா தந்திரமா மேஜிக் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், 6ம் வகுப்பு முதல் கல்லுாரி வரை பயிலும் மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலந்துரையாடல், பாட்டு பாடுதல், இளைஞர் தனித்திறன் வெளிப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!