மாநில அரசுகள் ஒருமித்த கருத்தை எட்டும் வரை அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்ககோரி முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மான சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதுசட்டப்பேரவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அணைகள் பாதுகாப்பு மசோதாவில், தமிழக அரசை பாதிக்கும் அம்சங்கள் உள்ளதாக குறிபிட்டுள்ளார். இதனால், நீர் பங்கிடுதல், அணைகளை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தலில் பிரச்சனைகள் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை இந்த மசோதாவை, மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளார்.இதையடுத்து அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு தி.மு.க வரவேற்பு தெரிவித்துள்ளது