பெரம்பலூர்: மே. 16 ம் தேதி நடைபெற இருக்கும் 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்திட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் முறையாக இயங்குகின்றதா என்பது குறித்து இன்று துறைரீதியிலான ஆய்வு மேற்கொண்டதில் பாடாலூர் (கடை எண்: 6318) அரசு மதுபானக்கடைக்கு பின்புறம் பாடாலூரை சேர்ந்த பாலு என்பவர் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 12 மது பாட்டில்களுடன் ரூ.3,030 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், குன்னத்தில் ஏரிக்கரை அருகில் சிவகாமி என்பவர் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 7 மது பாட்டில்களுடன் ரூ.1,280 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்டரூ.4,310 ரொக்கம், 19 மதுபாட்டில்கள் மற்றும் தொடர்புடைய நபர்களுடன் பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.