நடிகர் சிலம்பரசனின் உருவ பொம்மையை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்.
பெண்களை இழிவுப் படுத்தும் வகையில், கொச்சை படுத்தி பாடிய நடிகர் மற்றும் இசையமைப்பாளரின் உருவ பொம்மையை, பெரம்பலூர் மாவட்ட மாதர் சங்கத்தினர் பெரம்பலூர் காமராஜர் வளைவுப் பகுதியில் காவல் துறையின் மீறி எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணைச் செயலர் எஸ். கீதா தலைமையில், பெண்களை இழிவு படுத்தும் நோக்கில் பாடல் பாடிய நடிகர் சிலம்பரசன், அந்த பாடலுக்கு இசையமைத்த இடையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் உருவப்படங்களை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் எஸ். மீனா, ஒன்றிய செயலர்கள் டி. வைரமணி, பி. பத்மாவதி, கே. அனுசுயா, பொறுப்பாளர்கள் சரோஜினி, பூஞ்சோலை, மணியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். காவல்துறை சார்பில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இருந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாப்பா உமாநாத் நினைவு தினத்தையொட்டி, அவரது உருவ படத்திற்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.