தமிழகத்தில் மாவட்டம்தோறும் நடத்தப்படும் ஆளுநர் ஆய்வு சட்டப்படியே நடைபெறுவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிர் ஆளுநர் பன்வாரி லால் புரோகித் படிப்படியாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், மாவட்டங்களில் நடக்கும் ஆய்வு தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் ஆய்வு சட்டப்படியே நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டது தான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் ஆய்வு தொடர்பாக மஹாராஷ்டிரா அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் தெரிவித்த கருத்தும், ஆளுநர் ஆய்வு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.