தேவையான பொருட்கள் :
அரிசி – 1/2 சுண்டு
வறுத்த பயறு – 100 கிராம்.
கற்கண்டு – 200 கிராம்
தேங்காய் – 1
உப்பு – அளவிற்கு
தண்ணீர் – 14 தம்ளர்
* செய்முறை :
அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க .
* ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் .
*பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது சிறிதாக விட்டு இடியப்ப மா பதத்திற்கு நன்றாக அடித்துக் குழைத்து , சிறு சிறு துண்டுகளாக உருட்டி மெதுவாக தட்டி வைத்துக் கொள்க .
* பின்பு பானையில் 10 தம்ளர் தண்ணீரை விட்டு கொதித்த பின்பு வறுத்த பயறை கழுவிப் போட்டு அவியவிடவும் . பயறு முக்கல் பதமாக அவிந்து வரும் பொழுது உருட்டி வைத்துள்ள மா உருண்டைகளை ஒவொன்றாக போட்டு அவிய விடவும் .
* பின்பு மிகுதியாக உள்ள மாவில் பாலை விட்டு கரைத்துக் கொள்க
* கொத்தி நீரில் போட்ட மா உருண்டைகள் அவிந்ததும் கற்கண்டையும் கரைத்து வைத்துள்ள மா கரைசலையும் சேர்த்து கரண்டியால் நன்கு இடை விடாது துலாவி காய்ச்சவும் . கலவை ஓரளவு தடிக்க தொடங்கியதும் உப்பும் தேங்காய் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடனேயே பரிமாறலாம் .
* இலங்கையில் யாழ்ப்பகுதி மக்களது பாரம்பரிய உணவாக விளங்குவது ஆடிக்கூழ் ஆகும். இன்று இது போன்ற பாரம்பரிய உணவுப் பொருட்களை செய்யவும், சுவைக்கவும் பலருக்கு நேரமில்லை. யாழ் மக்களிடையே இந்த பாரம்பரிய ஆடிக்கூழ் பிரபல்யமானது. தற்போது சுற்றுலா பயணிகளும் பிடித்தமாக உண்கிறார்கள்.