* இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் புனித பூமியாக பௌத்தர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் வழிபாட்டிடமே தம்புள்ள குகை விகாரை. தற்போதைய இலங்கையில் காணப்படும் குகை விகாரைகளுள் இந்த ரஜமஹா விகாரையே பெரிதாக உள்ளது .

* கொழும்பில் இருந்து 142 km தூரத்தில் அடைந்துள்ளது. கண்டியிலிருந்து 72km தூரத்தில் உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கான காட்சி இடமாகவும் திகழ்கின்றது. 2001ம் ஆண்டு மே மாதம் 6 ம் திகதி
தம்புள்ளகுகை விகாரையில் 100 அடி உயரமான தங்க முலாம் பூசப்பட்ட புத்த பெருமானின் சிலை காண்போரை கவரக்கூடிய விதத்தில் வைக்கப்பட்டது.

* தம்புள்ள குகை விகாரையின் வரலாறு நீண்டது கி.பி.1ம் நூற்றாண்டில் அரசன் வட்டகாமினியின் பாதுகாப்பு அரணாக அமைக்கப்பட்டுள்ளது.கி.பி . கி.பி 12 ம் நூற்றாண்டிலே நிஸங்கமல்ல மன்னனால் இந்த இடம் பெருப்பிக்கப்பட்டுள்ளது. 5 குகைகள் இவரின் காலப்பகுதிலேயே உருவாக்கப்பட்டது.

* இங்கு புத்தமெருமானின் பல்வேறு நிலைகளைக் காட்டும் 153 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.4 சிலைகள் இந்து மக்களின் வழிபாட்டு தெய்வங்களாகும்.அவை விநாயகரின் சிலைகள் 3 .விஷ்ணுவின் சிலை ஒன்றுமாகும்.
கண்களை கவரும், ஆச்சரியத்தில் ஆழ்த்தும் குகைகளும்,குகை ஓவியங்களும் சிற்பங்கள்,சிலைகளையும் தன்னகத்தே கொண்டு தம்புள்ள குகை விளங்குகிறது.

*பிரதானமான 5குகைகளில் இலங்கையில் அரசாங்க மன்னர்களின் உருவச்சிலைகள்
வைக்கப்பட்டுள்ளது.இயற்கையான கற்களைச்செதுக்கியும் குடைந்தும்உருவாக்கப்பட்டதே இந்த வி காரை.1991ம் ஆண்டில் இருந்துஉலக மரபுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.குளிர்ச்சியான
ஆரோக்கியமான இவ்விடத்தை நீங்களும் ஒருமுறை வந்து பார்க்கலாம

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!