தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவால் கூடுதலாக 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று டெக் பார் ஆல் அமைப்பு கூறியுள்ளது.இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிறுவனர் ராம்பிரகாஷ் 24,000 மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று கூறினார். இந்த வழக்கில் மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.சி மற்றும் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற அவர் நீட் தேர்வை முழுமையாக முறைப்படுத்தி பின்னர் நடத்த வேண்டும் என்றார்.