பெரம்பலூர் : நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்மன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் தீவிர கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் தொடர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று பெரம்பலூர் நான்கு சாலை பகுதியில் சரவணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மோனிஷா நகரைச் சேர்ந்த சொக்கையன் மகன் பாலமுருகன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.59ஆயிரத்து 045 கண்டுபிடிக்கப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருவாய் கோட்டாட்சியர் பேபியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது