உலக அழகிப் போட்டியில் பங்கேற்கும் முதலாவது திருநங்கை’ என்ற பெருமையை, ஸ்பெயினைச் சேர்ந்த ஏஞ்சலா பான்ஸ் (Ponce) என்பவர் பெற்றுள்ளார். இந்தாண்டிற்கான உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான தேதி மற்றும் இடம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், வரும் உலக அழகி போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ஏஞ்சலா பான்ஸ் (Ponce) என்ற 26 வயதாகும் திருநங்கை களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், ஸ்பெயினில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் தம்மை எதிர்த்து போட்டியிட்ட20 பேரையும் தோற்கடித்து உள்ளூர் அழகிப்பட்டத்தை இவர் கைப்பற்றியிருந்தார்.இதையடுத்து, ஸ்பெயின் சார்பாக உலக அழகிப்போட்டிக்கு இவர் அனுப்பப்படவுள்ளார். இதன் மூலம் நங்கைகளுக்கான உலக அழகிப்போட்டியில் பங்கேற்கவுள்ள முதலாவது திருநங்கை என்ற பெருமையை பான்ஸ் பெற்றுள்ளார்.