பள்ளிகல்வி துறை சார்பில் நடைபெறும் உலக சுற்றுச்சூழல் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் மரக்கன்று நடும் விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று உரையாற்றினார் பள்ளிகல்வி துறை சார்பில் நடைபெறும் உலக சுற்றுச்சூழல் தினம் சென்னை வியாசார்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது அதில் கலந்துக்கொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உலக சுற்றுசூழல் தினத்தை இங்கு தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.இயற்கை தாய், நமக்கு நிலம், நீர், என பல்வேறு வளங்களை வழங்கியுள்ளதாக கூறிய புரோகித் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற வாசகத்தை சுட்டக்காட்டி, இயற்கை சார்ந்த பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர் .