பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் பாலம்பாடி கிராமத்தில் கட்சியினருடன் வாக்கு சேகரிப்பை துவங்கிய குன்னம் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் ஏ.வி.ஆர்.ரகுபதி ஜமீன் ஆத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், மேத்தால், காரப்பாடி, சில்லக்குடி, திம்மூர், மாக்காய்குளம், அருணகிரிமங்கலம், கொளத்தூர், கூடலூர், பிலிமிசை, இலுப்பைக்குடி ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேசிய ஊரக வேலை திட்டத்தில், ஏரி, குளம், வாய்க்ககால் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்களிடமும் கிராமங்கள் தோறும் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது ஐ.ஜே.கே கட்சி நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர் காமராஜ், வழக்கறிஞர் சிவசங்கர், பா.ஜ.க கூட்டணி கட்சியனர் உடன் இருந்தனர்.