கருப்பு பணம் பதுக்கல் பற்றி வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கும் நபர்களுக்கு 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைககளை ஊக்குவிக்கும் விதமாக, பரிசு தொகைக்கான விதிமுறைகள் கடந்த ஜுன் மாதம் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி வரி ஏய்ப்பு, பினாமி சொத்துக்கள், கருப்பு பணம் பதுக்கல் குறித்து வருமான வரித்துறையின் நுண்ணறிவுப் பிரிவு தலைமை இயக்குனர் அல்லது இணை ஆணையருக்கு தனி நபரோ, அல்லது குழுவாகவோ தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் அளிப்பவர் உரிய ஆவணங்கள் மற்றும் முகவரிகளை தருவதுடன், தங்களைப் பற்றிய சுய விவரங்களையும் வருமானவரித்துறைக்கு வழங்க வேண்டும்.
அந்த தகவலின் அடிப்படையில் உண்மை தன்மையை ஆய்வு செய்து 4 மாதங்கள் மற்றும் 6 மாதங்கள் என இரண்டு கட்டங்களாக 5 கோடி ரூபாய் வரை பரிசு அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது