Perambalur: Police rescue woman kidnapped by husband; The kidnappers are absconding!

பெரம்பலூரில், நேற்றிரவு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த தேனூரை சேர்ந்த செல்வராணி (43) என்பவரை அவரது கணவர் பெருமாள் உள்பட 3 பேர் வலுக்கட்டயமாக காரில் கடத்தி சென்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பெரம்பலூர் டவுன் போலீசார் மகள் கீர்த்தனா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செல்வராணியை கடத்திய கும்பல், அவரது கணவன் உள்பட 4 பேரின் செல்போன் டவர் லோக்கேசனை வைத்து விசாரணை நடத்திய நிலையில் செல்வராணி திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி அருகே உள்ள திண்ணனுரில் உறவினர் ஒருவர் வீட்டில் இருப்பதை உறுதி செய்த போலீசார் , அங்கு சென்று அவரை மீட்டு வந்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக செல்வராணியிடமும் விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவான 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறைவாக 3 பேர் கிடைத்தால் மட்டுமே கடத்தல் சம்பவத்தின் முழுபின்ணனி தெரிய வரும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் டவுன் போலீஸ் ஸ்டேசன் பொறுப்பு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!