காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். காவல் துறையில் உள்ள ஆடர்லி அமைப்பு ஒழிக்கப்படவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது போல் காவலர்களுக்கும் ஏன் விடுமுறை வழங்கப்பட கூடாது என கேள்வி எழுப்பினார்.மேலும், மன அழுத்தத்தில் இருந்து விடுபெற வார விடுமுறை காவலர்களுக்கு உதவியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு தகுந்த முடிவை தமிழக அரசு எடுக்கவேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியதோடு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் இன்றைய விசாரணையின் போது, காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்தார். மேலும், காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வரும் 19ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது