குட்கா வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கூடாது என கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, சட்டவிரோதமாக விற்பனைக்கு அனுமதித்ததாக எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது என தனது மனுவில் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.