இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் சந்தா கோச்சருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2012ம் ஆண்டு வீடியோக்கான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கிய வழக்கில் சந்தா கோச்சர் தலையீடு உள்ளதாக கூறப்பட்டது. இதன்படி, வேனுகோபால் தூத் என்பவருக்கு சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் மூலமாக கடன் வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. தற்போது சரியான பங்கு விவரங்களை சமர்பிக்காததால் சந்தா கோச்சருக்கு இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாரியத்தில் குறிப்பிட்டுள்ள விதிகளை ஐ.சி.ஐ.சி.ஐ மீறி உள்ளதாகவும் செபி குற்றம்சாட்டியுள்ளது.