மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 5 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 11 லட்சத்து 86 ஆயிரத்து 306 பேர் எழுதினர். இதற்காக 4 ஆயிரத்து 138 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொருளியல், கணக்குப் பதிவியல் உள்ளிட்ட வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை எழுந்ததால் பொருளியல் பாடத்திற்கு மட்டும் மறுதேர்வை நடத்தப்பட்டது .இந்தநிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, results.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.இந்த தேர்வில் காசியாபாத்தைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவத்சவா 499 மபிப்பெணக்ள பெற்று முதலிடம் பிடித்தார். மண்டல அளவில் 97.32 சதவீதம் பெற்று திருவனந்தபுரம் முதலிடத்தையும், 93 புள்ளி 87 சதவீதம் பெற்று சென்னை 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.