இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் குறித்து தற்போது காண உள்ளோம். அங்குள்ள கண்டியில் பிரசித்தி பெற்ற தலதா மாளிகை குறித்து முதலில் காண்போம்.

* மலைகள் சூழ்ந்த அழகிய நகரமான . கண்டி வரலாற்று பிரசித்தி பெற்ற இடம். அழகிய அந்நகரைச் சுற்றிலும் நடைபெறும் சமயப் பண்பாட்டு செயற்பாடுகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் குளக்கரை காட்சிகள் இரசிக்கத்தக்கவை.

* தலதா மாளிகையின் ரகசியங்கள் சுவையான கதைகள் நிரப்பியவை. கௌதம புத்தரின் ” பரிநிர்வாணம் ” அடைந்த பின் அவருடைய “தந்தத்தாது ” எனப்படும் பல் அங்கு வைக்கப் பட்டுள்ளது.

* ” குகசிவ ” எனும் அரசனின் வழி நடத்துதலில் அவரது மகளான ஹேமமாலா என்ற அரசிளங்குமாரியின் தலை முடியும் இங்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பக்தர்களாக தரிசிக்க வருகிறார்கள்.

* தலதா மாளிகையைச் சுற்றி அழகிய குளக்கரை கட்டுகளுடனான குளம் கவர்ந்திழுக்கும். சிங்கள பௌத்தர்களின் சொர்க்க பூமியாகவும், புனித பூமியாகவும் கருதப்படுகிறது.

* நாற்புறங்களிலும் இருந்து பார்க்கும் போது தங்க முலாம் பூசப்பட்டு தங்கக் கூரையுடன் தலதா மாளிகை தங்கத்தகடாக காட்சியளிக்கிறது.

* 18 ம் நூற்றாண்டு காலப்பகுதியில் அரசன் ஸ்ரீ விக்ரமராஜசிங்க மன்னன் காலப்பகுதிலேயே இந்த தலதா மாளிகை கட்டப்பட்டது.

* 1988 ம் ஆண்டு யுனெஸ்கோ உலக சுற்றுலா இடமாக இதனைப் பிரகடனப்படுத்தியது. கண்டிக்குச் சென்றால் தலதா மாளிகை, பழைய அரச மாளிகை, மகுல் மடுவ என்ற பழைய கட்டிடங்களையும் காணலாம்

* கண்டியில் நடைபெறும் எசல பெரஹெர ( ஊர்வலம் ) இந்நாட்டின் பண்டைய பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள், பாரம்பரிய கலை அம்சங்களை உலகிற்கு எடுத்தியம்புகிறது.

 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!