இத்தாலி நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவன் பிரக்ஞானந்தாவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பரிசு வழங்கி பாராட்டினார்.கிரிடின் ஓபன் ((Gredine Open)) செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 12 வயது மாணவன் பிரக்ஞானந்தா, அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். சென்னை திரும்பிய அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்திய பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் பரிசு வழங்கி கவுரவித்தார்.