2009-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அப்போதைய ஆளும் கட்சித் தலைவரான சோனியா காந்தி நிறைவேற்றத் தவறி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.டெல்லியில் இன்று அனைத்து வீடுகள் மின்மயமாக்கல் திட்டத்தின் பயனாளிகளிடையே உரையாற்றிய அவர் தற்போதைய அரசின் நடவடிக்கையால் கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் மின்மயமாக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.தங்கள் ஆட்சியின் போது அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை பொறுப்பான முறையில் நிறைவேற்றத் தவறிய முந்தைய அரசுகளின் தலைவர்கள் தற்போதைய அரசின் திட்டங்களில் குறைகளை கண்டுபிடிக்க முயற்சிப்பதாக அவர் சோனியா காந்தி மீது குற்றம்சாட்டினார்