டி20 கிரிக்கெட் தொடரில் இரண்டாயிரம் ரன்களை தாண்டி சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்–க்கு மனைவி சானியா மிர்சா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மோதும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே–பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் 37 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், சர்வதேச டி20 அரங்கில் இரண்டாயிரம் ரன்களை தாண்டிய 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக, ப்ரெண்டன் மெக்கல்லம், மார்டின் குப்தில் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். இதனிடையே சர்வதேச டி20 அரங்கில் இரண்டாயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்த சோயப் மாலிக்–க்கு மனைவியான இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டுவிட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.