ஜூலை மாதத்துக்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகத்துக்கு ஆணையிட்டுள்ளதுஉச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களை் இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தமிழக பிரதிநிதி செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில பிரநிதிகளும் பங்கேற்றனர். காவரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நான்கு மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஜூலை மாதத்துக்கு வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்குமாறு கர்நாடகாவுக்கு காவரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டது. ஜூன் மாத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நீர் போக எஞ்சிய நீரை திறந்து விடவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.